அறியவேண்டிய அஹ்லுஸ் ஸுன்னாவின் பத்து இமாம்கள்
-
மென்னட்டை
₹100
தற்போது கையிருப்பில் இல்லை
பதிப்பகத்திலிருந்து நேரடியாக அனுப்பப்படும்
நஷ்ருல் இஸ்லாம் பதிப்பகம்
நான் அறிந்த வரை ஷைக் அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சமூக அக்கறை உள்ள துடிப்பான இளைஞர், கல்வியாளர், கற்பதிலும் கற்பிப்பதிலும் ஆர்வமுள்ளவர். இந்த நூல் அதிகம் அதிகமாக பிரசுரிக்கப்பட வேண்டும்; அதிகமான மக்கள் இந்த நூலை வாசிக்க வேண்டும்; அந்த நல்லோர்களில் ஒருவரைத் தங்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நல்ல மாற்றத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். ஆமீன்!
— அஷ்ஷேக் உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம், தாருல் ஹுதா, சென்னை
எல்லா காலத்திலும் பித்அத் வாதிகள் இருந்திருக்கிறார்கள்; ஆனாலும் தூய இஸ்லாமை அவர்களால் நெருங்க முடியாமல் போனதற்கான காரணம், இஸ்லாமைப் பாதுகாக்கின்ற பணியில் அரணாக நின்றிருந்த அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள்தான். அத்தகைய அறிஞர்களில் முக்கியமானவர்களை இந்த சிறிய நூலில் இஸ்லாமிய அழைப்பாளர் அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அவர்கள் அறியத் தந்திருக்கிறார். இவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிவது இஸ்லாமிய உலகத்திற்கு, குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு தேவையான ஒன்றாகும்.
— அஷ்ஷேக் S. செய்யது அலி ஃபைஸி, முதல்வர், ஃபிர்தவ்ஸியா அரபிக் கல்லூரி
நூல் விவரங்கள்
- ஆசிரியர்
- மௌலவி அன்ஸார் ஹுசைன் ஃபிர்தௌஸி
- பதிப்பகம்
- நஷ்ருல் இஸ்லாம் பதிப்பகம்
- மொழி
- தமிழ்
- வகை
- வாழ்க்கை வரலாறுகள் (ஸஹாபாக்கள், அறிஞர்கள்)
- பக்கங்கள்
- 128
- பதிப்பு
- முதல் பதிப்பு (ஆகஸ்ட் 2025)









