من الناشر إلى بابك مباشرة.

الغلاف الخلفي

மார்க்கத்தில் நிலைத்திருப்பதற்கான பத்து அடிப்படைகள்

ஷேக் அப்துர்ரஹ்மான் அல்பத்தர்

  • غلاف ورقي

    ‏25 ₹

    غير متوفر حاليًا

يُشحن مباشرة من الناشر

Nashrul Islam Publications

மார்க்கத்தில் நிலைத்திருக்க பத்து அடிப்படைகள் என்ற தலைப்பில் அருமைத் தம்பி மவ்லவி மதார்ஷா ஃபிர்தவ்ஸி மொழிபெயர்த்துள்ள இந்நூலை மீள் பார்வை செய்த போது, மார்க்கத்தின் முக்கிய அம்சத்தை சுருக்கமாகவும் அதே சமயத்தில் தெளிவாகவும் விளக்கியிருப்பதை கண்டேன்.

அரபியில் இஸ்திகாமத் (நிலைத்திருத்தல்) என்று சொல்லப்படுவதின் கருத்து, மார்க்கத்தின் முதன்மையான கடமைகளையும் முக்கிய வழிகாட்டுதல்களையும் வாழ்நாளின் கடைசி வரை சரியான முறையில் நிறைவேற்றுவதாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக எவர்கள், “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் (அல்குர்ஆன் 46:13).

இந்த இறைவசனத்தில் கூறப்பட்டுள்ள சிறந்த நிலையை அடைவதற்கான வழிமுறைகள் இச்சிறு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைவரும் இதனைப் படித்து பயன் பெறுவதுடன் பிறருக்கும் அன்பளிப்பு செய்ய வேண்டிய நூல்.

— M. அப்துர் ரஹ்மான் மன்பயீ

تفاصيل الكتاب

المؤلف
ஷேக் அப்துர்ரஹ்மான் அல்பத்தர்
المترجم
மௌலவி மதார்ஷா ஃபிர்தௌஸி
الناشر
Nashrul Islam Publications
اللغة
التاميلية
التصنيف
التزكية وتطوير الذات
عدد الصفحات
48
الطبعة
முதல் பதிப்பு (ஆகஸ்ட் 2024)